பெண்ணிடம் இருந்து ஸ்மார்ட்போன் திருடிய நபர் சூரிச்சில் கைது திங்கட்கிழமை மாலை, சூரிச்சின் மாவட்டம் 8 இல் ஒரு பெண்ணிடம் வழிப்பறி இடம்பெற்றுள்ளது. சூரிச் நகர காவல்துறை விரைவில் சந்தேகப்பட்ட குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இரவு 10:30 மணியளவில், Seefeld (சீஃபீல்ட்) பகுதியில் கொள்ளை நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தவுடன்இ அதிகாரிகள் காயமடைந்த பெண்ணைக் கண்டுபிடித்தனர். அவர் சில நிமிடங்களுக்கு முன்பு தன்னிடம் இருந்த ஸ்மார்ட்போன் திருடப்பட்டதாகக் கூறினார். சந்தேக நபர் தொடர்பான விபரங்களை போலீசாருக்கு வழங்கினார். இதனை தொடர்ந்து திருடப்பட்ட ஸ்மார்ட்போன் காரணமாகஇ குற்றம் நடந்த சிறிது நேரத்திலேயே சந்தேக நபரை போலீசார் கண்காணிக்க முடிந்தது. பின்னர் 29 வயதான லிபிய நபர் ஒருவர் தொலைபேசியை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (c) tagesanzeiger