Swiss News In Tamil

Kaisten AG இன் நகராட்சி மேயர் தோட்டத்தில் சடலமாக மீட்பு

Kaisten AG இன் நகராட்சி மேயர் தோட்டத்தில் சடலமாக மீட்பு

Kaisten AG இன் நகராட்சி மேயர் தோட்டத்தில் சடலமாக மீட்பு ஆர்காவ் கன்டோன் கைஸ்டன் நகரின் ஃப்ரிக்டால் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை ஒரு வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.

இறந்தவர் நகரத்தின் மேயர் – அர்பத் மேஜர் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காவல்துறையின் கூற்றுப்படி, வன்முறைக்குற்றத்திற்கான எந்த சான்றுகளும் இல்லை எனவும் இருப்பினும் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் அரசு வழக்கறிஞரால் விசாரிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.

கைஸ்டன் என்பது சுமார் 2,700 குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு கிராமப்புற சமூகமாகும். இது ஆர்காவ் ஜுரா மலைகளின் வடக்கு விளிம்பில் உள்ள லாஃபென்பர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Kaisten AG

மேயரின் மரணம் தொடர்பில் ஒரு பொது அறிக்கையில்இ நகர சபை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. இந்த சம்பவத்தை ‘சோகமான விபத்து’ என்று விவரித்தது.

அர்பத் மேஜர் ஜனவரி 2018 முதல் நகராட்சி மேயராக இருந்து வருகிறார், முன்பு நகராட்சி கவுன்சிலராகவும், துணை மேயராகவும் சமூகத்தின் நலன்களுக்காக கடுமையாக உழைத்துள்ளார்.

Kaisten AG

அவரது நகைச்சுவை மற்றும் தொலைநோக்கு நடை அவரது சக ஊழியர்களால் பாராட்டப்பட்டது. அவரது இழப்பு பலருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(c) nau

Related Articles

Back to top button