Swiss News In Tamil

சூரிச்சில் கரையொதிங்கிய ராட்சத திமிங்கிலம்..??

சூரிச்சில் கரையொதிங்கிய ராட்சத திமிங்கிலம்.??

சூரிச்சில் கரையொதிங்கிய ராட்சத திமிங்கிலம்.?? திங்கள்கிழமை காலை முதல், சுவிட்சர்லாந்தின் சூரிச் ஏரிக்கரையில் 15 மீட்டர் நீளமுள்ள திமிங்கலம் ஒன்று கரையொதிங்கியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகளும் காணொளிகளும் பரவலாக பகிரப்பட்டன.

திமிங்கலம் பனிப்பாறையில் உறைந்துவிட்டதாகவோ அல்லது தன்னார்வக்குழுவினரால் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டதாகவோ சிலர் கருத்து தெரிவிக்கும் வகையில் ஊகங்கள் வேகமாக பரவத்தொடங்கின. இருப்பினும், இது ஒரு போலி என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நம்பமுடியாத உயிரோட்டமான 15 மீட்டர் நீளமுள்ள மாதிரி திமிங்கிலமானது பெல்ஜியக் குழுவான கேப்டன் பூமர் கலெக்டிவ், சூரிச் தியேட்டர் ஸ்பெக்டேகல் (Theater Spektakel) மற்றும் கடல் பாதுகாப்பு அமைப்பான KYMA ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

சூரிச்சில்

சுற்றுச்சூழல் அழிவு, இனங்கள் அழிவு மற்றும் இயற்கை வாழ்விடங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மூன்று நாள் நிகழ்வின் ஒரு பகுதியாக கேப்டன் பூமர் அவர்களால் குறித்த திமிங்கிலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நிலத்தால் சூழப்பட்டிருந்தாலும், இரசாயனங்கள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உள்ளிட்ட நாட்டின் மாசுபாடு இறுதியில் பெருங்கடல்களை அடைகிறது என்று சூரிச் தியேட்டர் ஸ்பெக்டேகல் வலியுறுத்தினார்.

இந்த கலைக் காட்சியானது, தியேட்டர் ஸ்பெக்டேக்கலின் சுற்றுச்சூழலியல் பிரச்சினைகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் ஒரு பகுதியாகும். மேலும் இந்த விழா செப்டம்பர் 1 ஆம் தேதி வரை (Zurich-Wollishofen) சூரிச்-வோலிஷோஃபெனில் நடைபெறும்.

கேப்டன் பூமர் 2008 ஆம் ஆண்டு முதல் பாரிஸ், லண்டன், மாட்ரிட் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நகரங்களில் இந்த யதார்த்தமான திமிங்கலங்களை உருவாக்கி வருகிறார். சூரிச்சில் உள்ள திமிங்கலம் நமது சுற்றுச்சூழல் அமைப்புகளின் சீர்குலைவுக்கான சக்திவாய்ந்த நினைவூட்டலாகும்.

Related Articles

Back to top button