Swiss News In Tamil
காஸா சமாதான திட்டத்திற்கு சுவிஸ் அரசு ஆதரவு
காஸா சமாதான திட்டத்திற்கு சுவிஸ் அரசு ஆதரவு
காஸா சமாதான திட்டத்திற்கு சுவிஸ் அரசு ஆதரவு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வைத்துள்ள காஸா சமாதான திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஆதரவினை வெளியிட்டுள்ளது.
காஸாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவது மற்றும் பணயக் கைதிகளை விடுதலை செய்தல் ஆகியன தொடர்பில் பைடன் யோசனைத் திட்டமொன்றை முன்மொழிந்துள்ளார்.

மூன்று கட்டங்களாக சமாதான உடன்படிக்கை அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சமாதான முனைப்புக்களுக்கு ஆதரவளிக்கப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.






