Swiss News In Tamil

ஆராவ்வில் ஸ்பீட் கேமராவை உடைத்த பெண் : போலீசார் வலைவீச்சு

ஆராவ்வில் ஸ்பீட் கேமராவை உடைத்த பெண் : போலீசார் வலைவீச்சு

ஆராவ்வில் ஸ்பீட் கேமராவை உடைத்த பெண் : போலீசார் வலைவீச்சு பெப்ரவரி நடுப்பகுதியில் ஆராவ் நகரில் ஒரு பெண்- நகர காவல்துறையின் வேகக் கேமராவைத் எட்டி உதைத்து 27,000 பிராங்குகள் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தினார். இப்போது அந்த குற்றத்திற்காக அவருக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரியில்இ அந்த வழியாகச் சென்ற ஒரு பெண் ஆராவ் நகர காவல்துறையினருக்குச் சொந்தமான வேகக் கேமராவை பலமாக உதைத்துள்ளார். இதனால் குறித்த சாதனம் சரிந்து வீழ்ந்ததோடு கேமரா, லென்ஸ் மற்றும் டிரான்ஸ்மிஷன் யூனிட் உடைந்தன. உடனடியாக விரைந்து செயல்பட்ட காவல்துறை அந்த பெண்ணை அந்த இடத்திலேயே நிறுத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இதன் பின்னர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு குறித்த பெண்ணுக்கு 10 மாத சிறைத்தண்டனை உட்பட அதிகளவான தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2,566 பிராங்குகள் நடைமுறைச் செலவுகளையும் அவள் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கோரியுள்ளது. மேலும் இன்னும் அவளிடமிருந்து இழப்பீடு கோரவேண்டும் என பலரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆராவ்வில்
ஆதாரம்: ArgoviaToday

இந்நிலையில் ஜெர்மனிக்கு சென்றிருந்த அந்த பெண் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் ஆராவ்வின் பழைய நகரத்தில் ஒரு கடையை தனது விநியோக முகவரியாகக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அந்த முகவரியில் விசாரணை மேற்கொண்டபோது குறித்த பெண்ணைப்பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அங்கிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் மீதான விசாரணை உண்மையில் வசந்த காலத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் பிரதிவாதி ஆஜராகவில்லை. எனவே கைது வாரண்ட் மூலம் அவர் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: ArgoviaToday

Related Articles

Back to top button