Swiss News In Tamil

Rapperswil – Seedamm பகுதியில் 3 வாகனங்கள் மோதி விபத்து

Rapperswil - Seedamm பகுதியில் 3 வாகனங்கள் மோதி விபத்து

Rapperswil – Seedamm பகுதியில் 3 வாகனங்கள் மோதி விபத்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2:30 அளவில் Rapperswill (ராப்பர்ஸ்வில்) SeeDamm (சேடம்) பகுதியில் 2 கார்கள் மற்றும் 1 டெலிவரி ட்ரக் விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் ஒரு ஆணுக்கு சிறு காயங்களும், ஒரு பெண்ணுக்கு குறிப்பிடப்படாத காயங்களும் ஏற்பட்டன. மேலும் போக்குவரத்து நடவடிக்கைகளில் நீண்டு தாமதம் ஏற்பட்டது.

45 வயதுடைய நபர் ஒருவர் மதியம் 2:30 மணியளவில் (Pfäffikon) பபிகோனிலிருந்து இலிருந்து றப்பர்வில் (Rapperswil) நோக்கி  Seedamm பாதையில் டெலிவரி ட்தைக்கை ஓட்டிக்கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசல் காரணமாக அவர் மிகவும் தாமதமாக பிரேக் போட்டார்.

Rapperswil 281658 281656

இதனால் அவரது வாகனம் 48 வயதுடைய நபரின் கார் மீது மோதி பின்னர் எதிர்த்திசையில் சென்றது. அங்கு எதிரே வந்த 66 வயது பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் மீது ட்ரக் மோதியது. இதனால் பாதையின் இரு திசைகளும் போக்குவரத்திற்காக தடைப்பட்டது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அவசர சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் மதிப்பிலான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Credits (c) Kapo SG

Related Articles

Back to top button