ஜெனிவாவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – ஒருவர் படுகாயம்
Shooting in Geneva - One seriously injured
ஜெனிவாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதோடு குற்றாவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இளைஞர் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியாதாக அறியப்பட்ட இளைஞன் கொலை முயற்சி குற்றச்சாட்டில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குறித்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. சிறப்பு துப்பாக்கிப் படை உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்படும் போது அவர் இன்னும் பல ஆயுதங்களுடன் இருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
தாக்குதலுக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக ஜெனிவா போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.






