Swiss News In Tamil
பாசல் முதியோர் இல்லத்தில் தீ!! ஒருவர் காயம்!
புதன்கிழமை காலை பாசலில் உள்ள ரெப்காஸ்சவில் ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் 78 வயதான ஒருவர் தீ விபத்தில் காயமடைந்தார். துணை மருத்துவர்கள் அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நேற்று காலை 7:15 அளவில் ஏற்பட்ட தீ, பாசல் தீயணைப்புத் துறை வரும்வரை மூன்றாம் தரப்பினரால் அணைக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு பின்னர் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தீவிபத்துக்கான காரணம் குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை.






