Swiss News In Tamil

டாவோஸ் மாநாடு : தலைசுற்ற வைக்கும் ஹோட்டல் வாடகைகள்.!!!

டாவோஸ் மாநாடு : தலைசுற்ற வைக்கும் ஹோட்டல் வாடகைகள்.!!! சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரம் முழுவதும் தற்போது உலக நாடுகளில் இருந்து அரசியல் தலைவர்களும், வர்த்தக தலைவர்களும் ஒன்றாக கூடியுள்ளனர். 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள உலக பொருளாதார கூட்டத்தில் கலந்துக்கொள்ள 130க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனால் டாவோஸ் நகரத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஹோட்டல் அறைகள், வீடுகளின் வாடகை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. மேலும் வாடகை தாறுமாறாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேடியன் ஆல்ப்ஸ் மலைகளில் அமைந்துள்ள டாவோஸ் நகரம், உலக பொருளாதார கூட்ட நடைபெறும் காலத்தில் பல நாட்டு தொழிலதிபர்களும், அரசியல் தலைவர்களும் வரும் காரணத்தால் இதை முதலீட்டு ஈர்க்கும் வாய்ப்பாகவும், வர்த்தக நட்புறவை மேம்படுத்தும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

டாவோஸ் மாநாடுடாவோஸ் மாநாடு

பிற நாடுகளில் இருந்தும் அரசியல் தலைவர்களும், வர்த்தக தலைவர்களும் டாவோஸ் வரும் காரணத்தால், இக்காலக்கட்டத்தில் தங்குவதற்கான விடுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு டிமாண்ட் அதிகரித்து வாடகை விண்ணை முட்டிகிறது. ஜனவரி 20 முதல் 24 வரை நடைபெறவுள்ள றுநுகு கூட்டத்திற்காக ஜனவரி 15 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் ஹோட்டல் புக்கிங் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.

ஹோட்டல்கள் தாண்டி ஏர்பிஎன்பி போன்ற தளங்களில் வாடகைக்கு வீடுகளும் டாவோஸ் நதரில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் வாடகைகூட தலைசுற்றும் அளவிற்கு விலை எகிறியிருப்பதாக பிற நாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button