Swiss News In Tamil

சுவிஸ் விமான சேவை – தம்பதிகளுக்காக விமானத்தில் படுக்கையறை.!

உலகின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான சுவிஸ் விமான சேவை நிறுவனம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு அளவில் இரட்டை படுக்கை இருக்கைகளைக் கொண்ட விமானங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

தம்பதியினராக விமான பயணங்களை மேற்கொள்வோருக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எயார்பஸ் ஏ350 போன்ற விமானங்களில் இந்த இரட்டை படுக்கை இருக்கை அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.

சுவிஸ் விமான சேவை, Swiss Airlines, விமானத்தில் படுக்கையறை

இந்த விமான இருக்கைகள் தனி அறையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிஸ் மற்றும் லுப்ஸ்தான்சா ஆகிய விமான சேவை நிறுவனங்கள் புதிய விமானத்தை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய விமானங்களில் உள் வடிவமைப்பு சிறந்த முறையில் காணப்படுவதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு சூரிச் மற்றும் ஜெனிவா ஆகிய கான்டன்களைச் சேர்ந்த பிரயாணிகள் இந்த இரட்டை படுக்கை இருக்கைகளைக் கொண்ட விமானங்களில் பயணம் செய்ய சந்தர்ப்பம் கிட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் சாதாரண இருக்கைகள் படுக்கைகளாக மாற்றம் வரும் வகையில் இந்த விமான இருக்கைகள் வடிவமைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Related Articles

Back to top button