Swiss News In Tamil

சென்ட்காலன் மாகாணத்தில் தலைதூக்கும் கொள்ளை சம்பவங்கள்..!!

சென்ட்காலன் மாகாணத்தில் தலைதூக்கும் கொள்ளை சம்பவங்கள்..!! சென்ட்காலன் மாகாணத்தில் உள்ள Bazenheid SG இல் வீடு ஒன்றினுள் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பல ஆயரம் ப்ராங் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (பிப்ரவரி 19, 2023) , 1:05 மணியளவில், அடையாளம் தெரியாத குற்றவாளி ஒருவர் Eichbüelhangweg இல் உள்ள ஒரு குடும்ப வீட்டிற்குள் நுழைந்தார்.

வீட்டிற்குள்  Terrassentür வழியாக வலுக்கட்டாயமாக நுழைந்த கொள்ளையன் வீடு முழுவதும் தேடிதல் செய்து பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் மதிப்புள்ள நகைகள் மற்றும் கைக்கடிகாரங்களை திருடிச்சென்றுள்ளார்கள்.

Eichbüelhangweg, Bazenheid SG, Wittenbach, சென்ட்காலன் மாகாணத்தில், Einbruch

திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 3,000 பிராங்குகள் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் கன்டோனல் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சென்ட்காலன் மாகாணத்தில் சம்பவம் – 2

சென்ட்காலன் மாகாணத்தில் மேலும் சனிக்கிழமை மாலை Wittenbach இல் இன்னுமொரு கொள்ளை சம்பவம் பதிவாகியுள்ளது.சனிக்கிழமை  09:30 a.m., Holengartenstrasse இல் ஒரு மொட்டை மாடி வீட்டிற்குள் அடையாளம் தெரியாத குற்றவாளி ஒருவர் நுழைந்தார்.

Eichbüelhangweg, Bazenheid SG, Wittenbach, சென்ட்காலன் மாகாணத்தில், Einbruch

சந்தேக நபர்கள் வீட்டின் சன்னல் வழியாக உள்ளே நுழைந்துள்ளதாக தெரியவருகிறது. உள்ளே பல ஆயிரம் பிராங்குகள் ரொக்கமாக இருந்ததை குற்றவாளிகள் திருடிச் சென்றுள்ளதோடு பொருட்களின் சேதவிபரம் சில நூறு பிராங்குகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சென்ட்காலன் மாகாணத்தில் சம்பவம் – 3

சென்ட் காலன் மாகாணத்தில் மேலும் ஒரு கொள்ளைச்சம்பவம் பவதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை( 19/2/23) Flawil இல் உள்ள அன்டர்ஸ்ட்ராஸ்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன் வாசல் திறந்த நிலையில் இருக்கும் போது குற்றவாளி கெல்லர் (Keller) எனப்படும் கட்டிடத்தின் கீழ் பகுதிக்கு சென்று ஒளிந்து கொண்டு பின்னர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Eichbüelhangweg, Bazenheid SG, Wittenbach, சென்ட்காலன் மாகாணத்தில், Einbruch

மொத்தம் 17 பாதாள அறைகள் அதாவது ‘கெல்லர்’ அறைகள் உடைத்து திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தார்கள். எனினும் திருடப்பட்ட பொருட்களின் சொத்து மதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் சென்காலன் கன்டோனல் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

 

Related Articles

Back to top button