பேர்ன் போலீசார் நள்ளிரவில் கண்ட காட்சி : இருவர் தலைமறைவு
பேர்ன் போலீசார் நள்ளிரவில் கண்ட காட்சி : இருவர் தலைமறைவு
பேர்ன் போலீசார் நள்ளிரவில் கண்ட காட்சி : இருவர் தலைமறைவு ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 8, 2024 அன்று, அதிகாலை 1:30 மணியளவில், பெர்ன் கன்டோனல் காவல்துறையின் ரோந்துப் பணியாளர் ஒருவர் (Neubrückstrasse) நொய்ய புரூக் திராஸ்ஸவில் காயமடைந்து கிடந்ததைக் கண்டுபிடித்தார்.
அந்த நபருக்கு சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ் குழுவினர் சிகிச்சை அளித்து பின்னர் மேலதிக பரிசோதனைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்த நபர் பல குற்றவாளிகளால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார். பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் வெள்ளை மேலாடை, நீண்ட பேன்ட் மற்றும் வெள்ளை ஷூ அணிந்திருந்தார், மற்றவர் ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு மேலாடை அணிந்திருந்தார் எனவும் பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்..
Bern-Mittelland பிராந்திய அரசு வக்கீல் அலுவலகம் விசாரணைக்கு தலைமை தாங்கி, சம்பவத்தை அவதானித்த சாட்சிகளைத் தேடி வருகிறது.





