Swiss News In Tamil

பிரான்ஸில் தொழில்களில் இணையவுள்ளவர்களுக்கு தகவல்

பிரான்ஸில் 20 வயதில் வேலை செய்யத் தொடங்கினால் 62 வயதில் ஓய்வூதியம் பெற முடியும் என பிரதமர் Élisabeth Borne அறிவித்துள்ளார். தற்போது 62 ஆக உள்ள ஓய்வூதிய வயதை 65 ஆக உயர்த்த மக்ரோன் தலைமையிலான அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்த முயற்சிக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகிறது.

பிரான்ஸ் செய்திகள், France News in Tamil, Élisabeth Borne

இந்நிலையில், 20 அல்லது 21 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒருவர் பணிக்குச் சேர்ந்திருந்தால் அவரால் 62 வயதில் ஓய்வை அறிவிக்க முடியும் என பிரதமர் நேற்று சனிக்கிழமை அறிவித்தார்.

ஊடகத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்தார். சராசரியாக 42 வருடங்கள் கடமையாற்றுவதே குறிக்கோள் ஆகும். ஒருவர் 18 வயதில் பணிக்குச் சேர்ந்தால் அவர் 60 வயதிலேயே ஓய்வூதியம் பெற தகுதியுடையவராகிறார் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், “20 முதல் 21 வயதிற்குள் வேலை செய்யத் தொடங்கியவர்கள் 64 அல்ல, 63 வயதில் ஓய்வு பெறலாம்.

20 முதல் 21 வயதிற்குள் வேலை செய்யத் தொடங்கியவர்களுக்கு இந்த நீண்ட தொழில் முறையை விரிவுபடுத்துவதன் மூலம் நாங்கள் நகர்த்தப் போகிறோம். இதனால் அவர்கள் 63 வயதில் ஓய்வு பெற முடியும்.

Related Articles

Back to top button