Swiss News In Tamil

சுவிஸ் மக்களே எச்சரிக்கை.! “போலி போலீசார்” ஆர்காவ் மாநிலத்திலும் கைவரிசை.!

சுவிஸ் மக்களே எச்சரிக்கை.! “போலி போலீசார்” ஆர்காவ் மாநிலத்திலும் கைவரிசை.! போலி போலீஸ் அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகள் தொடர்பாக லுசேர்ன் மாநகரில் இடம்பெற்றுவரும் கொள்ளை சம்பவங்கள் பற்றிய செய்தி எமது இணையத்தளத்தில் நேற்றய தினம் பிரசுரித்திருந்தோம். போலீசாரின் முக்கிய அறிவுப்பு தொடர்பான அந்தச்செய்தியை படிக்காவதங்கள் இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

லுசேர்ன் நகரில் இடம்பெறும் போலீயான போலீஸ் அதிகாரிகளின் கைவரிசை தற்போது ஆர்காவ் மாநிலத்திலும் இடம்பெற்றுவருவதாக ஆர்காவ் கன்டோன் போலீசார் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார்கள்.



போலீசாரின் அறிவிப்புப்படி, போலி போலீஸ் அதிகாரிகளின் அழைப்புகள் பற்றிய புகார்கள் தற்போது மீண்டும் குவிந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக, மோசடி செய்பவர்கள் மீண்டும் தங்கள் கைவரிசையை மக்களிடம் காட்டி வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.

சுவிஸ், போலி போலீசார், ஆர்காவ், லுசேர்ன் மாநகரில், Argau, Luzern, Fake police Swtzerland

வாரத்தின் தொடக்கத்தில் இருந்து, முப்பதுக்கும் மேற்பட்டோர் போலியான காவல்துறை அதிகாரிகளால் அழைக்கப்பட்டதாக காவல்துறைக்கு புகார் குவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உறவினர்கள் விபத்தில் சிக்கியதா சொல்லப்பட்டு தவறான போலீஸ் அதிகாரிகள் பல்வேறு தொகைகளை கேட்டுள்ளார்கள். இப்படியான இவர்களின் கைவரிசையில் இரு வேறு நபர்கள் ஏமாந்து பெருந்தொகை பணத்தை கொடுத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

சுவிஸ், போலி போலீசார், ஆர்காவ், லுசேர்ன் மாநகரில், Argau, Luzern, Fake police Swtzerland

Fricktal  சேர்ந்த ஒரு வயதான பெண்மணி கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பிராங்குகளை ஒரு போலீஸ்காரர் போல் காட்டிக் கொண்ட ஒருவரிடம் கொடுத்து ஏமாந்துள்ளார்.

Limmattal erschien என்ற பகுதியிலும் ஒருவர் கிட்டத்தட்ட இருபதாயிரம் பிராங்குகளை கொடுத்து ஏமாந்துள்ளார்.. ஆர்காவ் வில் உள்ள கன்டோனல் போலீசார் மீண்டும் இதுபோன்ற மோசடி செய்பவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வருகின்ற போது யாரும் பதிலளிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் ஆர்காவ் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளதோடு இந்த செய்தியை பலரும் அறியும் படியும் கேட்டுள்ளார்கள்.

இந்த செய்தியினை படிப்பதோடு நிறுத்திவிடாமல் சுவிஸ் தமிழர்களே உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதாக கலந்து பேசுங்கள். தயவுசெய்து மற்றவர்களும் அறிந்துகொள்ள வாட்சம் மற்றும் முகநூல் மூலமாக இந்த செய்தியினை பகிர்ந்து கொள்ளுங்கள்.. நாளை எம்மவர்களும் ஏமாறாலம்.. உங்கள் பகிர்வு ஒருவரையேனும் காப்பாற்றலாம்.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Related Articles

Back to top button