ஆர்காவ் கன்டோனில் இளைஞர்களால் சாரமாரியாக குத்தப்பட்ட நபர்.!!

ஆர்காவ் கன்டோனில் Kaiseraugst, Liebrüti பகுதியில் வசிக்கும் வசிக்கும் 57 வயதுடைய நபரை இளைஞர்கள் வெள்ளிக்கிழமை மாலை அடித்துக்கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பலரையும் அதிரச்சியடைய வைத்துள்ளது. கன்டோனல் போலீசார் குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை தேடிவருகின்றார்கள்.

ஜனவரி 13, 2023 வெள்ளிக்கிழமை மாலை, சுமார் 10:00 மணியளவில், லிப்ரூட்டி மாவட்டத்தில் வசிக்கும் 57 வயதுடைய ஒருவர் தனது நாயுடன் உலா வர விரும்பி தனது கட்டிடத்தை விட்டு வெளியேறும் போது, அவரை பல இளைஞர்கள் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
அனைவரும் சேர்ந்து குறித்த நபரை தாக்க முற்பட்ட போது ஒருவரை தடுத்து நிறுத்த முன்பட்ட அவரை கும்பலில் இருந்த இளைஞன் ஒருவன் மூஞ்சியில் பல தடவைகள் கத்தியால் குத்தியுள்ளான்.
இந்த தாக்குதலின் விளைவாக, 57 வயதான சுவிஸ் நபர் காயமடைந்து இரத்த சிந்த சிந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.





