லூசேர்னில் போதை நிலையில் ஓட்டியவர் போலீஸ் வாகனத்தை மோதி விபத்து சுவிட்சர்லாந்தின் Lucerne கன்டோனில் உள்ள Hochdorf பகுதியில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இடம்பெற்ற சாலை விபத்து ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. பாதசாரி கடவை அருகே நின்றிருந்த போலீஸ் வாகனத்தின் பின்புறத்தில், போதைப் பொருள் தாக்கத்தில் இருந்த ஓட்டுநர் தனது காரை நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் மோதியுள்ளார். போலீஸ் வழங்கிய தகவலின்படி, 42 வயதுடைய அந்த ஓட்டுநரிடம் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட சாலைப் பரிசோதனையில் போதைப்பொருள் இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரை மேலதிக இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படாதது நிம்மதியளிப்பதாக இருந்தாலும், சாலை பாதுகாப்பு விதிகளை மீறியதால் குறித்த நபரின் ஓட்டுநர் உரிமம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் போதை நிலையில் வாகனம் ஓட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுவதுடன், இது போன்ற சம்பவங்கள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கின்றன. சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, போதைப் பொருள் அல்லது மது தாக்கத்தில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். Kapo LU