Swiss News In Tamil

டிரம்பின் உத்தரவிற்கு அதிருப்தி வெளியிட்ட சுவிட்சர்லாந்து

டிரம்பின் உத்தரவிற்கு அதிருப்தி வெளியிட்ட சுவிட்சர்லாந்து

அமெரிக்காவில் மரண தண்டனையை வலுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த நிறைவேற்று உத்தரவிற்கு சுவிட்சர்லாந்து அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் (UNHRC) சுவிட்சர்லாந்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது.

டிரம்பின்

“மரண தண்டனை மனித உரிமைகளுக்கு விரோதமானது” என்று சுவிட்சர்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சகத்தின் அமைதி மற்றும் மனித உரிமை பிரிவு தலைவர் டிம் என்டர்லின் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“குற்றங்களைத் தடுக்கும் விதமாக மரண தண்டனை பயனுள்ளதாக இருக்கும் என்று எந்த ஆதாரமும் இல்லை எனவும் நீண்ட சிறைத்தண்டனை வழங்குவதை விட இது கூடுதல் பலனளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button