Swiss News In Tamil

காரில் தனியாக சிக்கிய நாய்க்குட்டிகளை காப்பாற்றிய போலீசார்

காரில் தனியாக சிக்கிய நாய்க்குட்டிகளை காப்பாற்றிய போலீசார்

காரில் தனியாக சிக்கிய நாய்க்குட்டிகளை காப்பாற்றிய போலீசார் புதன்கிழமை பிற்பகல் காரில் சிக்கியிருந்த இரண்டு நாய்களை லவுசான் போலீசார் மீட்டுள்ளனர்.

நாய்கள் இரண்டும் சோகமாக இருந்ததாகவும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். கார் பார்க்கிங் ஒன்றிலையே குறித்த நாய்கள் காரில் தனியாக விடப்பட்டு செல்லப்பட்டிருந்தது.

போலீசார்

உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நேரமாகியதால் அதிகாரிகள் காரை உடைத்துஇ நாய்களை வெளியேற்றிஇ தண்ணீர் கொடுத்தனர்.

பின்னர் குறித்த நாய்கள் இரண்டும் மீட்புக் கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் குறித்த நாய்கள் உரிமையாளரால் மீட்கப்பட்டதாகவும் உரிமையாளர் நாய்களை தனியான விட்டுச்சென்றமைக்காக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button