Swiss News In Tamil
சுவிஸ் நெடுஞ்சாலை விக்னெட்டுக்களுக்கான காலக்கேடு இன்றுடன் முடிவு.!
சுவிஸ் நெடுஞ்சாலை விக்னெட்டுக்களுக்கான காலக்கேடு இன்றுடன் முடிவு.! பெப்ரவரி முதலாம் திகதியான இந்த நாளில், 2024 ஆண்டிற்கான விக்னெட் வாகனங்களில் ஒட்டுவதற்கான சலுகைக் காலம் முடிவடைகிறது.
விக்னெட் இல்லாமல் இன்றிலிருந்து சுவிஸ் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டினால், 200 பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும். பெட்ரோல் நிலையங்கள், தபால் நிலையங்கள், எல்லைக் கடப்புகள் அல்லது ஆன்லைனில் நீங்கள் விக்னெட்டுகளை வாங்கமுடியும்.
சுவிட்சர்லாந்து நெடுஞ்சாலைகள் (Autobahn) பற்றி சுவாரசியமான தகவல்கள்.!

இதன் விலை 40 பிராங்குளாகும். நீங்கள் எந்த நாட்டவரை சேர்ந்தவராக இருந்தாலும் சுவிட்சர்லாந்து நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துவதாயின் இந்த விக்னெட்டு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.





