Swiss News In Tamil

சுவிஸ் மாகாணமொன்றில் அகதிகளுக்காக ஒரு பயிற்சி மையம்

சுவிஸ் மாகாணமொன்றில், அகதிகளுக்காக பயிற்சி மையம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் Bern மாகாணத்தில், Bellelay என்னுமிடத்தில் அகதிகளுக்காக செஞ்சிலுவைச் சங்க பயிற்சி மையம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

அகதிகள், சுவிஸ் தொழிலாளர் சந்தையுடன் ஒன்றிணைந்து வாழ்வதை உற்சாகப்படுத்தும் வகையிலும், அதே நேரத்தில், மருத்துவத்துறையில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காகவும் இந்த முயற்சி துவக்கப்பட்டுள்ளது.

சுவிஸ்

20 மாதங்கள் மொழிப்பயிற்சியுடன், நடைமுறை தொழிற்பயிற்சியும் வழங்கப்படும் நிலையில், பயிற்சி பெறுவோருக்கு பயிற்சி முடிந்ததும், மருத்துவத்துறையில் ஒரு துணை பட்டயப்படிப்புக்கான சான்றிதழும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

© WRS

Related Articles

Back to top button