சுவிட்சர்லாந்தில் மூடப்படும் அபாயத்தில் பிரபல நிறுவனம் : 300 பேர் வேலை இழப்பு
சுவிட்சர்லாந்தில் மூடப்படும் அபாயத்தில் பிரபல நிறுவனம் : 300 பேர் வேலை இழப்பு
ஸ்விட்சர்லாந்து பெர்ன் நகரின் பும்ப்லிட்ச் (Bümpliz) பகுதியில் உள்ள ஜான்சன் (Janssen) என்ற பிரபல தடுப்பூசி தொழிற்சாலை மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1898 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், கடந்த கொரோனா காலத்தில் தனது இதன் கிளை நிறுவனமான Johnson & Johnson-க்காக தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது. ஆனால் 2026 முடிவிற்கு முன்பு இந்த தொழிற்சாலை மூடப்பட வாய்ப்பு உள்ளது.
பெர்ன் தொழிற்சாலையில், Janssen மற்றும் Sanofi ஆகிய இரண்டு பெரும் மருந்து நிறுவனங்கள் சேர்ந்து Kolibacteria எனும் நோய்க்கெதிரான ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்க முயன்றனர். ஆனால் மேற்கொண்ட ஆய்வில், அந்த தடுப்பூசி பாரம்பரிய மருந்துகளுடன் (placebo) ஒப்பிடும்போது போதுமான விளைவுகளை தரவில்லை. இதனால் அந்த தடுப்பூசி திட்டத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், பெர்ன் தொழிற்சாலையில் lentiviral vector என்ற வகை தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை செயலிழக்கப்பட்ட lentivirus-களை மூலமாக கொண்டு நோய்க்கெதிரான மருந்து சிகிச்சையை வழங்கும் வகையில் உள்ளன. ஆனால் Janssen இப்போது இந்த தயாரிப்பை நெதர்லாந்தில் புதிய தொழிற்சாலை திறந்து 2026 முதல் அங்கு மாற்ற வேண்டும் என்று திட்டமிடுகிறது. இவ்வாறான காரணிகளால் தொழிற்சாலை மூடப்படும் வாய்ப்புக்கு தள்ளப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

Janssen நிறுவனம், சட்டப்படி கடுமையான பணியாளர் ஆலோசனை செயல்முறையை தொடங்கி உள்ளது. அடுத்த 18 மாதங்களில், இந்த பெரும் மாற்றங்களால் 300 பணியாளர்கள் பணியிலிருந்து விலகும் அபாயம் உள்ளது.
பெர்ன் தொழிற்சாலையின் மூடல், அந்தப் பகுதியின் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பாக அமையும். பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும். தொழிற்சாலை மூடப்பட்டாலும், இதன் கிளை நிறுவனமான Johnson & Johnson நிறுவனம் சுவிட்சர்லாந்தில் 5000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்.
@ SwissTamilMedia / 20min





