Swiss News In Tamil

உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்கிறோம் : சுவிஸ் ஜனாதிபதி

உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்கிறோம் : சுவிஸ் ஜனாதிபதி

உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்வதாக சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர் (Karin Keller-Sutter) தெரிவித்துள்ளார். உக்ரைன் போரின் மூன்றாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கீவ் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“நீடித்த மற்றும் நீதியுள்ள அமைதியே எங்கள் இலக்கு எனவும் உக்ரைனின் பங்கு இன்றி நிலையான தீர்வு எட்ட முடியாது,” எனவும் அவர் தெரிவித்தார். வீடியோ காட்சி மூலம் அவர் இந்த உரையை நிகழ்த்தியுள்ளார்.

சுவிஸ் ஜனாதிபதி

“உக்ரைனில் மட்டுமல்ல, முழு கண்டத்திலும் அமைதி ஏற்படுத்த ஐரோப்பிய சகாக்களுடன் நெருக்கமாக பணியாற்ற முனைகிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கான மனிதாபிமான உதவி மற்றும் மறுசீரமைப்பு பணிகளட தொடரும் என கெல்லர்-சுட்டர் உறுதியளித்தார். சுவிட்சர்லாந்து  அரசு 1.5 பில்லியன் ஸ்விஸ் பிராங்க் ($1.67 பில்லியன்) ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button