Swiss News In Tamil

சுவிஸில் வாடகை அதிகரிப்பு புலம்பெயர்ந்தவர்களே காரணம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

சுவிஸில் வாடகை அதிகரிப்பு புலம்பெயர்ந்தவர்களே காரணம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு…!! சுவிட்சர்லாந்தில், அதிகரித்து வரும் வீட்டு வாடகையால் நடுத்தர வகுப்பு மக்கள் அவதியுறும் விடயம் நிபுணர்களை கவலையடைய வைத்துள்ளது.

அதிகரித்து வரும் வீட்டு வாடகை

சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகைகள் அதிகரித்துவருகின்றன. குறைந்த வருவாய் கொண்ட மக்கள், தங்கள் வருவாயில் கிட்டத்தட்ட பாதியை வீட்டு வாடகைக்கே செலவிடுவதாக ஃபெரடல் வீட்டு வசதி அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.

சராசரியாகப் பார்த்தால் வாடகை வீடுகளில் குடியிருப்போர், தங்கள் வருவாயில் மூன்றில் ஒரு பங்கை வீட்டு வாடகைக்கே செலவிடுகின்றனர். அதிக வாடகை காரணமாக நல்ல வீடுகளுக்கு மாற தங்களால் இயலாது என கருதும் நடுத்தர வகுப்பு மக்கள், தொடர்ந்து ஒரே வீட்டில் குடியிருப்பதால், வீடு வாங்கல், விற்றல் ஆகிய நடைமுறைகளைக் கொண்ட சொத்துச் சங்கிலி என்னும் விடயம் பாதிக்கப்படுகிறது.

சுவிஸில் வாடகை

இதற்கிடையில், புலம்பெயர்ந்தோர்தான் வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு காரணம் என குற்றம் சாட்டுகிறார்கள் வலதுசாரி அரசியல்வாதிகள். ஆனால், அப்படி இல்லை, போதுமான வீடுகள் கட்டப்படாததே பிரச்சினை என்கிறார்கள் எதிர் தரப்பினர்.

வீடு கட்ட அனுமதி பெறுவதிலுள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் அவர்கள், பிரச்சினை தீர, கூடுதல் வீடு கட்டும் கூட்டுறவு அமைப்புகளுக்கு அனுமதியளிக்கவேண்டும் என்கிறார்கள்.

மொத்தத்தில், அதிகரித்து வரும் வீட்டு வாடகையால் நடுத்தர வகுப்பு மக்கள் அவதியுறுவதாக துறைசார் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

Related Articles

Back to top button