Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளுக்கு பலத்த புயல் எச்சரிக்கை.!!

லிச்சென்ஸ்டைன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த புயல்கள் வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Meteo Switzerland இன் கூற்றுப்படி, ரைன் பள்ளத்தாக்கில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 120 கிமீ வேகத்தை எட்டும், அதே நேரத்தில் மலைகளில், காற்றானது மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும். இதேபோன்ற எச்சரிக்கைகளை, பிராந்திய வானிலை சேவையான Wetterring Liechtenstein பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது.

பலத்த புயல்

பலத்த காற்றினால் மரங்கள் விழும், கிளைகள் முறிந்து, பொருள்கள் அடித்துச் செல்லப்படலாம். பாதுகாப்பாக இருக்க:
– காடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
– மரங்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
– எந்த தளர்வான பொருட்களையும் வெளியே வீசுவதைத் தடுக்க அவற்றைப் பாதுகாக்கவும். எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Meteo Switzerland இன் எச்சரிக்கை (லிச்சென்ஸ்டைன்) Liechtenstein, (சர்கன்ஸ்சர்லண்ட்) Sarganserland, Schiers, Werdenberg, Appenzell, (கெரென்ஸ்ஏர்பேர்க்-சீஸ்ட்டல்) Kerenzerberg-Seeztal மற்றும் Landquart-Chur (லங்குவாட் கூர்) ஆகிய இடங்களுக்குப் பொருந்தும்.

எனவே மக்கள் இது தொடர்பில் அவதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Articles

Back to top button