Swiss News In Tamil

போலி ஸ்பிடெக்ஸ் ஊழியராக நடித்து மூதாட்டியை ஏமாற்றி நகை திருட முயற்சி..!

போலி ஸ்பிடெக்ஸ் ஊழியராக நடித்து மூதாட்டியை ஏமாற்றி நகை திருட முயற்சி..!

சுவிட்சர்லாந்தின் வின்டர்தூர் (Winterthur) நகரின் வூல்ஃப்லிங்கன் (Wülflingen) பகுதியில், 91 வயதுடைய மூதாட்டியின் வீட்டில் ஸ்பிடெக்ஸ் ஊழியராக நடித்து நுழைந்து நகைகளை திருட முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சற்று முன், மூதாட்டியின் மகள் ஒருவர் Stadtpolizei Winterthur யை தொடர்புகொண்டு, தமது தாயின் வீட்டிற்கு ஒரு ஆண் நபர் வருகை தந்து, தன்னை ஸ்பிடெக்ஸ் சேவையைச் சேர்ந்த ஊழியர் என அறிமுகப்படுத்தியதாக தெரிவித்தார். அந்த நபர் வீட்டிற்குள் இருந்தபோது, பல்வேறு நகைகளை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர், வீட்டில் இருந்த ஒரு அலமாரி திறந்து இருப்பதை கவனித்த மூதாட்டி, அந்த நபரை நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, அவர் எடுத்துச் சென்ற நகைகளை மீண்டும் திருப்பி கொடுத்துவிட்டு, உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N7a 1

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், அந்த நபர் மூதாட்டி வழக்கமாக பயன்படுத்தும் ஸ்பிடெக்ஸ் அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லாதவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, வின்டர்தூர் நகர போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மூத்த குடிமக்களை குறிவைத்து நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், ஸ்பிடெக்ஸ் அல்லது பிற சேவை நிறுவனங்களின் பெயரில் வருகை தருவோரின் அடையாளங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும் என போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

© Kapo ZH

Related Articles

Back to top button