Swiss News In Tamil

டிசினோ கன்டோனில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு : போலீசார் விசாரணை

டிசினோ
@ kantonpolizei

டிசினோ கன்டோனில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு : போலீசார் விசாரணை.!! செவ்வாய்க் கிழமை காலை, டிசினோவின் Mendrisiotto (மென்ட்ரிசியோட்டோ) பகுதியில் அமைந்துள்ள ( Morbio Inferiore) மோர்பியோ இன்ஃபெரியரில் உள்ள ஒரு வீட்டில் 65 வயதுடைய பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

காலை 10:30 மணிக்கு முன்னதாகவே இந்த கண்டுபிடிப்பு நடந்ததாக டிசினோ கன்டோனல் போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்ட போதிலும், மருத்துவர் அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

பெண்ணின் மரணத்திற்கான காரணம் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. குறித்த மரணத்தின் பின்னணியில் யாராவது உள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் Mendrisiotto பகுதியைச்சேர்ந்த 68 வயதான இத்தாலிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
©Keystone/SDA

Related Articles

Back to top button