Swiss News In Tamil

பாசலில் உள்ள SBB ரயில் நிலையயத்தில் ஆயுதமேந்தி கொள்ளை

பாசலில் உள்ள SBB ரயில் நிலையயத்தில் ஆயுதமேந்தி கொள்ளை.!! நேற்று வியாழக்கிழமை நவம்பர் 21, 2024, அன்று, மாலை 6:05 மணியளவில், பாசலில் உள்ள SBB ரயில் நிலையத்திற்குள் அமைந்துள்ள நிதிநிறுவனம் கொள்ளையடிக்கப்பட்டது.

முகமூடி அணிந்த நபர் ஒருவர் நிதிநிறுவனத்துக்குள் நுழைந்து ஊழியரை துப்பாக்கியை காட்டி மிரட்டி பல ஆயிரம் சுவிஸ் பிராங்குகளை திருடியுள்ளார். இந்த சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சந்தேகநபர் குற்றத்தைச் செய்த பின்னர் பாசல் பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ரயில் நிலையம் நோக்கி தப்பிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. Basel-Stadt Cantonal காவல்துறை உடனடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது, ஆனால் அந்த நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.



பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் சுமார் 160-170 செ.மீ உயரமுள்ள, கருமையான சருமம் கொண்ட ஒரு இளைஞன் என விவரிக்கப்பட்டுள்ளார். கொள்ளையடிக்கும் போது அவர் கருப்பு நிற உடைகள், கருப்பு பேண்ட், கறுப்பு ஜாக்கெட், கருப்பு காலணிகள் அணிந்திருந்தார்.

சந்தேக நபரை அடையாளம் கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். பயனுள்ள தகவல் உள்ளவர்கள், **061 267 71 11** என்ற எண்ணில் Basel-Stadt வழக்குரைஞர் அலுவலகத்தின் குற்றவியல் காவல்துறையைத் தொடர்புகொள்ளவும் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கவும்.

சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் இருந்தால், விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் நினைவூட்டுகின்றனர். பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சமூகத்திற்கும் காவல்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்பதையும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button