Swiss News In Tamil

சுவிஸ் பொது போக்குவரத்து நிறுவனங்களிடம் புதிய கோரிக்கை

சுவிஸ் பொது போக்குவரத்து நிறுவனங்களிடம் புதிய கோரிக்கை

சுவிஸ் பொது போக்குவரத்து நிறுவனங்களிடம் புதிய கோரிக்கை சுவிற்சர்லாந்தின் ரயில், பேருந்து மற்றும் டிராம் போன்ற பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் பயணச் சீட்டுக்கு பயணிகளிடம் இருந்து ரொக்கப்பணத்தை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய சபைக்குப் பின்னர், மாநிலங்களின் பேரவையும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.

சுவிஸ் பொது போக்குவரத்து

சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து மானிய போக்குவரத்து நிறுவனங்களையும் இலக்காகக் கொண்டு, பசுமைக் கட்சியின் உறுப்பினர் மானுவேலா வெய்செல்ட் முன்வைத்த யோசனையை பேரவை ஏற்றுக்கொண்டது.

பயணிகள் மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதியால் பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே அவர்களை கருத்தில் கொண்டு கூட்டாட்சி பேரவை இந்த பிரேரணையை ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button