Swiss News In Tamil

டிரம்பின் நடவடிக்கையினால் சுவிஸ் நிறுவனங்களுக்கு பாதிப்பு

டிரம்பின் நடவடிக்கையினால் சுவிஸ் நிறுவனங்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவில் மிகவும் விலை கூடிய மருந்துகளை குறைக்க திட்டமிட்டிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது உலகம் முழுவதும் மருந்துத் துறைறசார் சந்தையில் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு பெரிய இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. “அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான உத்தரவுகளில் ஒன்றை திங்கள் அன்று கையெழுத்திட உள்ளேன்” என டிரம்ப் தனது Truth Social இணைய தளத்தில் தெரிவித்தார்.

கடந்த வாரமே அவர் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பின்னணியில் மருந்து விலை குறைப்பு தொடர்பான நடவடிக்கையே உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் முன்னதாகவே ஊகித்திருந்தன.

அமெரிக்காவின் வரி

இந்த நடவடிக்கையைச் சுற்றிய அச்சத்தால் உலகளாவிய பங்குச் சந்தைகளில் மருந்து நிறுவன பங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிபர் டிரம்ப், மருந்துகளுக்கு உலகளவில் ஒப்பிடக்கூடிய விலை அமைப்பை அமெரிக்க மருந்து நிறுவனங்கள் ஏற்க வேண்டுமென்று அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார்.

Related Articles

Back to top button