Swiss News In Tamil

அதிவேக கமராவில் இருந்து 7 முறை தப்பிய இளைஞன் சிக்கினான்.!!

போலீசாருக்கு தண்ணிகாட்டிய இளைஞன் : துர்காவ் போலீசார் அதிரடி

அதிவேக கமராவில் இருந்து 7 முறை தப்பிய இளைஞன் சிக்கினான்.!! கடந்த சில மாதங்களாக துர்காவ் கன்டோனின் Bischofszell பகுதியில் பலமுறை அதிவேகமாக வாகனம் ஓட்டி சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை துர்காவ் கன்டோனல் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சென்ட்காலன் மாகாணத்தைச் சேர்ந்த 18 வயதான சுவிஸ் இளைஞன் தனது ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தை பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்குள் நகரத்தில் ஏழு முறை அதிவேகமாக ஓட்டிச் சென்ற இளம் மோட்டார் வாகன ஓட்டுநரை போலீஸ் இதுவரையில் தேடிவந்துள்ளனர். இந்நிலையிலையே அவரை போலீசார் தற்போது அடையாளம் கண்டுள்ளனர்.

அதிவேக கமராவில்

அதன்படி, அவரின் வேகத்திற்கான பாதுகாப்பு விளிம்பைக் கழித்த பிறகு, அவர் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தை குறைந்தபட்சம் மணிக்கு 23 மீற்றர் அளவு மீறியுள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

அதிவேகமாகச் சென்றபோது, ​​மோட்டார் சைக்கிளின் உரிமத் தகடு சிதைந்து அல்லது காணாமல் போயிருந்தமையினால் அவரை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்ததாகவும் போலீசார் குறிப்பிடுகின்றனர்.

மார்ச் 18 அன்று ஒரு பயணத்தின் போது, ​​அவர் மணிக்கு 104 கிலோமீட்டர் வேகத்தில் சென்றமை பதிவாகியுள்ளது. எனினும் அவரது ஓட்டுனர் உரிமம் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு அரசு வழக்கறிஞர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button