Swiss News In Tamil

ஹமாஸ் குழுவை 5 ஆண்டுகளிற்கு தடை செய்த சுவிட்சர்லாந்து

புதிய சட்டத்தின் கீழ்இ ஹமாஸ் மற்றும் அதன் சார்பாக அல்லது அதன் பெயரில் செயல்படும் அமைப்புகள் அல்லது குழுக்களுக்கு தடை விதிக்கப்படும் என்று சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இஸ்ரேலில் பாலஸ்தீன பயங்கரவாதக் குழு நடத்திய தாக்குதல்களில் கிட்டத்தட்ட 1,200 பேர் வரையில் கொல்லப்பட்டார்கள்.

ஒக்டோபர் 7ஆம் திகதி இரண்டு சுவிஸ் பிரஜைகளைக் கொன்று கிட்டத்தட்ட 250 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர் இவ்வாறான முடிவு எட்டப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஹமாஸைத் தண்டிப்பதுடன், சுவிட்சர்லாந்தை பாதுகாப்பான புகலிடமாகப் பயன்படுத்துவதையோ அல்லது நாட்டில் தாக்குதல்களை நடத்துவதையோ தடுப்பதை இந்த தடை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் ஃபெடரல் கவுன்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தடை 5 ஆண்டுகள் வரையே மட்டுப்படுத்தப்பட்டது; என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button