Swiss News In Tamil

சூரிச்சிலிருந்து புறப்பட்ட விமானத்தில் சேதம் : திடீர் தறையிறக்கம்

ஜன்னலில் ஏற்பட்ட விரிசல் : திடீரென தரையிறங்கிய விமானம்..!!

சூரிச்சிலிருந்து புறப்பட்ட விமானத்தில் சேதம் : திடீர் தறையிறக்கம்.!! சூரிச்சில் இருந்து சுவீடன் – கோதன்பர்க்(Gothenburg)நோக்கிச் சென்ற சுவிஸ் விமானம் ஒன்று நேற்று வியாழன் அன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானியின் முன் ஜன்னலில் விரிசல் ஏற்பட்டதால் விமானம் ஜெர்மனியின் ஹனோவர் நகரில் தரையிறங்க வேண்டியதாயிற்று. விமானத்தில் 123 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் பயணித்திருந்தனர்.

சூரிச்சிலிருந்து

பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. சுவிஸின் கூற்றுப்படி, முற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹனோவரில் மாற்று தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர்.

பயணி ஒருவர் தெரிவித்தபடிஇ விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக சூரிச்சிலிருந்து புறப்பட்டது. விமானத்தில்இ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்க விமான நிலையம் தேடப்படுவதாக பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. 20 நிமிடங்களுக்குப் பிறகு விமானம் ஹனோவரில் தரையிறங்கியது. என தெரிவித்தார்.

Related Articles

Back to top button