Swiss News In Tamil

சுவிட்சர்லாந்துக்குள் மோசமான விடயத்துக்காக பெண்களைக் கடத்தும் கும்பல்

சுவிட்சர்லாந்துக்குள் மோசமான விடயத்துக்காக பெண்களைக் கடத்தும் கும்பல், இளம்பெண்களைக் கடத்தி சுவிட்சர்லாந்துக்குள் அனுப்பும் இரண்டு நாடுகளைச் சேர்ந்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

மோசமான விடயத்துக்காக பெண்களைக் கடத்தும் கும்பல்
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இருவர், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த இருவர் அடங்கிய கும்பல் ஒன்று, இளம்பெண்களைக் கடத்தி சுவிட்சர்லாந்துக்குள் அனுப்பியுள்ளது.

அந்த பெண்கள் சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழில் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

சுவிட்சர்லாந்துக்கு,பெண்களை,கடத்தும் கும்பல்

இரு நாடுகள் சேர்ந்து மேற்கொண்ட நடவடிக்கை

ஆகவே, சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாண பொலிசாரும், ஹங்கேரி நாட்டு பொலிசாரும் இணைந்து இரு நாடுகளிலும் நடத்திய ரெய்டுகளில், சுவிட்சர்லாந்தில் இரண்டுபேரும், ஹங்கேரியில் இரண்டுபேரும் சிக்கினார்கள்.

அத்துடன், அவர்கள் பிடித்து வைத்திருந்த மூன்று இளம்பெண்களையும் பொலிசார் மீட்டுள்ளனர். அவர்கள் தற்போது அரசு காப்பகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட கும்பலிடமிருந்து, விலையுயர்ந்த கார்கள், நகைகள், பணம் முதலானவை கைப்பற்றப்பட்டுள்ளன.

 

Source:- Lankasri

Related Articles

Back to top button