Swiss News In Tamil

சுவிஸ் தலைவர்கள் ஆங்கிலத்தில் பேசக்கூடாது: தடை விதிக்கும் மசோதா

சுவிஸ் தலைவர்கள் ஆங்கிலத்தில் பேசக்கூடாது: தடை விதிக்கும் மசோதா

சுவிஸ் நாட்டு தலைவர்கள் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் பேசும்போது ஆங்கிலத்தில் பேச தடை விதிக்கும் மசோதா ஒன்றை சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

ஆங்கிலத்தில் பேசுவதற்கு பதிலாக, சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகளில் ஒன்றான ஜேர்மன், பிரெஞ்சு அல்லது இத்தாலி மொழிகளில்தான் சுவிஸ் தலைவர்கள் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் பேசவேண்டும்.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 93 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 81 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

Parliament begins its summer session today1

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், சுவிஸ் அமைச்சர்கள் சிலருக்கு சரியாக ஆங்கிலம் பேசத் தெரியாது. ஆளும் ஃபெடரல் சுவிஸ் கவுன்சில் உறுப்பினரும், சுவிஸ் பொருளாதார, கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சருமான Guy Parmelin, ஃபெடரல் கவுன்சிலில் இணையும் முன் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் ’I can English understand but…’ என்று கூறினார். அதாவது, இன்று நாட்டின் முக்கிய பொறுப்பிலிருக்கும் Guy Parmelinக்கு சரியாக ஆங்கிலம் பேசத்தெரியவில்லை. தடுமாறிய அவர், பிறகு பிரெஞ்சு மொழியில் பேசி சமாளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button