Swiss News In Tamil

சென்ட்காலன் பகுதியின் பரபரப்பு : கத்தியால் பலரை தாக்கிய நபர் கைது.!!

சென்ட்காலன் பகுதியின் பரபரப்பு : கத்தியால் பலரை தாக்கிய நபர் கைது.!!

சென்ட்காலன் பகுதியின் பரபரப்பு : கத்தியால் பலரை தாக்கிய நபர் கைது.!! சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற பயங்கர மோதல் சம்பவமொன்றில் பலர் படுகாயமடைந்துள்ளனர். கன்டோனல் பொலிஸாரின் கூற்றுப்படி, 34 வயதான சுவிஸ் நபர் பலரை கத்தியால் தாக்கினார்.

கர்ப்பிணிப்பெண் மற்றும் ஒரு சிறு குழந்தை உட்பட நான்கு பேர் அவரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் நேற்றைய தினம் இரவு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

நேற்று வியாழன் அன்று இரவு 9:30 மணியளவில் (Hochwachtstrasse) ஹோக்வாட்ச் திரஸ்ஸேவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் படிக்கட்டில் இந்த குற்றம் நடந்துள்ளது. அவர் தனது 66 வயது தந்தையைப் பார்க்க சென்ற 29 வயது, நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை திடீரெனத் தாக்கியுள்ளார்.

சென்ட்காலன்
(c) zueritoday

உதவிக்கு விரைந்து வந்தவரையும் தாக்கியுள்ளார். மேலும் வெளியே, மற்றொரு 31 வயதான குடியிருப்பாளரையும் காயப்படுத்தினார். இதனால் அவருடன் இருந்த குழந்தையும் காயம் அடைந்தது. அக்கம்பக்கத்தினரின் அவரை பிடிக்க முயன்று இறுதியில்இ போலீசார் கத்திக்குத்து நடாத்திய நபரை கைது செய்தனர்.

யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தெரிவிக்கின்றனர். எனினும் குற்றத்தின் பின்னணி தொடர்பாக தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Credits (c) zueritoday

Related Articles

Back to top button