Swiss News In Tamil

யூரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு கால்பந்து போட்டிக்காக சிறப்பு ரயில்கள்

யூரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு கால்பந்து போட்டிக்காக சிறப்பு ரயில்கள்

2025 ஜூலை 2 முதல் ஜூலை 27 வரை நடைபெறும் (UEFA Women’s Euro 2025) யூரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு கால்பந்து போட்டிக்காக சுவிட்சர்லாந்து முழுவதும் சுமார் 7 லட்சம் ரசிகர்கள் நேரலை போட்டிகளை பார்ப்பதற்காக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிகள் 8 முக்கிய நகரங்களில் நடைபெற இருப்பதால், சுவிட்சர்லாந்தின் தேசிய ரயில் நிறுவனமான SBB (Swiss Federal Railways), ரசிகர்களை அரங்குகளுக்கு அழைத்து செல்ல 400 சிறப்பு ரயில்கள் இயக்கும் என அறிவித்துள்ளது.

போட்டி நடைபெறும் நகரங்கள்:

  • பாசல் (Basel)
  • பெர்ன் (Bern)
  • ஜெனீவா (Geneva)
  • லூசெர்ன் (Lucerne)
  • சியான் (Sion)
  • செயின்ட். கல்லென் (St. Gallen)
  • துண் (Thun)
  • சூரிச் (Zurich)

SBB திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், போட்டிக்கான டிக்கெட் வைத்துள்ளவர்கள், அன்று நிகழும் போட்டிகளுக்காக சுவிட்சர்லாந்து முழுவதும் பொது போக்குவரத்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button