சூரிச் கன்டோனில் நாய் கடிக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சூரிச் கன்டோனில் நாய் கடிக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சூரிச் கன்டோனில் நாய்க்கடிக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டை விட 2023 இல் சூரிச் மாகாணத்தில் நாய்கள் கணிசமான அளவு நாய்கள் மக்கள், மற்றும் பிற விலங்குகளை கடித்துள்ளன.
சூரிச் மாகாணத்தின் கால்நடை அலுவலகம் சமீபத்தில் வெளியிடப்பட்ட வருடாந்திர அறிக்கையின்படி, அதிகரிப்புக்கு வெளிப்படையான காரணம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள்இ கால்நடை மருத்துவர்கள் மற்றும் காவல்துறை மற்றும் தனிநபர்களின் முறைப்பாடுகளின் படி 2023 இல் சுமார் 24 சதவீதம் கூடுதல் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. நாய்கடி தொடர்பாக கால்நடை அலுவலகம் 1661 அறிக்கைகளை கணக்கிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களை கடித்த சம்பவம் தொடர்பாக 839 வழக்குகள் பதிவாகியுள்ளன. மற்ற நாய்கள் அல்லது பிற விலங்குகளை கடித்தது தொடர்பாக 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





