Swiss News In Tamil

Waadt இல் மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு இரண்டாவது மரணம்

Waadt இல் மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு இரண்டாவது மரணம் வவுட் கன்டோனில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் நேருக்கு நேர் மோதியதில், விபத்தில் சிக்கிய இரண்டாவது நபரும் இறந்துள்ளதாக வவுட் கன்டோனல் போலீசார் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.

வாட்

இவ்விபத்தில் முதலாவது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்இ இரண்டாவது நபர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

காவல்துறையின் கூற்றுப்படிஇ முந்திச் செல்ல முற்பட்டபோது நேருக்கு நேர் மோதியது. குறித்த விபத்தின் காரணமாக சாலை இரு திசைகளிலும் பல மணி நேரம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசு வழக்கறிஞர் அலுவலகம் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது. விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறியும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button