Swiss News In Tamil

ஒப்வால்டன் கன்டோன் : தொலைபேசி மோசடி குறித்து முக்கிய அறிவிப்பு

ஒப்வால்டன் கன்டோனில் தொலைபேசி மோசடிகள் இடம்பெறுவதாகவும் இதுகுறித்து ஜாக்கிரதையாக இருக்கும்படியும் போலீசார் அறிவிவுறுத்தியுள்ளனர்.

வங்கி நிறுவனத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளைப் போன்று பலருக்கும் அழைப்பு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

அழைப்பினை எடுப்பவர்கள் உங்கள் கிரெடிட் கார்டில் சந்தேகத்திற்கிடமான கட்டணங்கள் இருப்பதாகவும், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை நீங்கள் அழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஒப்வால்டன்

எனவே அத்தகைய அழைப்புகளில் இருந்து கவனமாக இருக்கும்படியும், பெரும்பாலும் அதன் பின்னால் ஒரு மோசடி நோக்கம் உள்ளதாகவும் போலீசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.

இவ்வாறான அழைப்புகளுக்கு பதிலளிக்காமல் அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் அதற்கு பதிலாக உங்கள் வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளவும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button