Swiss News In Tamil

பாசல் முல்ஹவுஸ் விமான நிலையத்தில் மீண்டும் குண்டு அச்சுறுத்தல்

பாசல் முல்ஹவுஸ் விமான நிலையத்தில் மீண்டும் குண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் நான்கு தடவைகள் இவ்வாறு குண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குண்டுப் பீதி காரணமாக பேசல் முல்ஹவுஸ் அல்லது யூரோ விமான நிலையத்தின் விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டன.

பாசல், முல்ஹவுஸ், விமான நிலையத்தில், குண்டு அச்சுறுத்தல், EuroAirport near Basel evacuated due to bomb threat

பேசலுக்கு மிக அருகாமையில் இருந்தாலும் இந்த விமான நிலையம் பிரான்ஸ் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

அண்மைய நாட்களாக பிரான்ஸில் விமான நிலையங்கள் மீது குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

இந்த நான்கு சந்தர்ப்பங்களிலும் போலியான முறையில் குண்டுத் தாக்குதல் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து முகவரியைக் கொண்ட மின்னஞ்சல் மூலம் இந்த குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Back to top button