Swiss News In Tamil

லூசர்ன் நகரம் : சுவிட்சர்லாந்தின் சொர்க்கப் புள்ளி.!

லூசர்ன் நகரம் : சுவிட்சர்லாந்தின் சொர்க்கப் புள்ளி

“ஹே மக்களே! வெல்கம் பேக்! இன்னைக்கு நாம போகப்போற ஊரு… சும்மா வேற லெவல்! வரைபடத்துல சுவிட்சர்லாந்தைப் பார்த்தீங்கன்னா, கரெக்டா நடுவுல ஒரு நகரம் மிளிரும். அதான் லூசர்ன் (Lucerne). இதை ‘ஹார்ட் ஆஃப் சுவிட்சர்லாந்து’ (Heart of Switzerland) அப்படின்னு சொல்வாங்க.
ஏன் தெரியுமா? சுவிட்சர்லாந்தோட எந்த மூலைக்கும் நீங்க போகணும்னாலும், லூசர்ன் தான் உங்க ஸ்டார்ட்டிங் பாயிண்ட்!
லூசர்னின் புவியியல் மற்றும் முக்கியத் தரவுகள்:
  • அமைவிடம்: கடல் மட்டத்துல இருந்து சுமார் 436 மீட்டர் உயரத்தில், ‘ராய்ஸ்’ (Reuss) நதியும் ‘லூசர்ன் ஏரி’யும் இணையுற இடத்துல அமைஞ்சிருக்கு.
  • மலைகளின் கோட்டை: இந்த நகரத்தைச் சுற்றி ‘பிலாத்துஸ்’ (Pilatus), ‘ரீகி’ (Rigi), மற்றும் ‘டிட்லிஸ்’ (Titlis) ஆகிய பிரம்மாண்டமான ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள் அரண் போல நிற்குது.
  • மக்கள் தொகை: இந்த நகரோட மக்கள் தொகை சுமார் 86,000. ஆனா, சுத்தி இருக்குற பகுதிகளைச் சேர்த்தா 2.2 லட்சத்துக்கும் மேல!
  • மொழி: அதிகாரப்பூர்வ மொழி ‘சுவிஸ் ஜெர்மன்’ (Swiss German). ஆனா டூரிஸ்ட் ஏரியாங்கறதால ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளையும் மக்கள் சரளமா பேசுவாங்க.
  • பொருளாதாரம்: மெயின் வருமானமே சுற்றுலாத்துறை தான்! இதுதவிர வாட்ச் தயாரிப்பு (Rolex, Bucherer போன்ற பிராண்டுகளின் ஹப்) மற்றும் ஐடி துறை செழிப்பா இருக்கு.”

வரலாற்றுச் அதிசயங்கள் — மரப்பாலம் & நீர் கோபுரம்

“இப்போ பார்க்கிற  இடம் தான் லூசர்னின் அடையாளம் — சாப்பல் பாலம் (Chapel Bridge / Kapellbrücke).
Chapel Bridge
1333-ஆம் ஆண்டுல (சுமார் 14-ஆம் நூற்றாண்டு) மரத்தால கட்டப்பட்ட நடைபாலம் இது. உலகத்திலேயே மிக பழமையான மரப்பாலம் இதுதானாம்! இந்த பாலத்துல நம்ம தென்னிந்த பிரபல நட்சத்திரங்களின் பல பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதை நீங்கள் அநிந்திருப்பீர்கள்.
இந்த பாலத்துல என்ன சிறப்பு?
  1. கூரை ஓவியங்கள்: பாலத்துல நடந்து போறப்போ மேல கூரையைப் பார்த்தீங்கன்னா, 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்கோண வடிவ ஓவியங்கள் இருக்கும். இது லூசர்னின் வரலாற்று சம்பவங்களையும், மதக் கதைகளையும் சொல்லுது.
  2. வாட்டர் டவர் (Water Tower): பாலத்துக்கு நடுவுல 34 மீட்டர் உயரத்துல ஒரு எண்கோண வடிவக் கோபுரம் இருக்கு. 1300-களில் இது நகரத்தின் பாதுகாப்பு அரணாகவும், அப்புறம் சிறைச்சாலையாகவும், சித்திரவதைக்கூடமாகவும், கருவூலமாகவும் பயன்பட்டிருக்கு!
  3. 1993 தீ விபத்து: ஒரு சுவாரசியமான விஷயம்… 1993-இல் நடந்த ஒரு எதிர்பாராத தீ விபத்துல இந்த பாலத்தோட பெரும் பகுதி எரிஞ்சு போச்சு. ஆனா, சுவிஸ் மக்கள் ஒரே வருஷத்துல அதை பழமை மாறாம அப்படியே புதுப்பிச்சுட்டாங்க!”

கலங்கும் கண்கள் — லயன் மான்யுமென்ட் & ஓல்ட் டவுன்

“அடுத்ததா நாம பார்க்கப்போறது… மனித உணர்ச்சிகளை கல்லில் வடிச்ச ஒரு அற்புதம். இதான் ‘லயன் மான்யுமென்ட்’ (Lion Monument / Löwendenkmal).
Lion Monument
இதன் வரலாறு:
1792-இல் பிரெஞ்சு புரட்சியின் போது, பிரெஞ்சு அரச குடும்பத்தைக் காப்பாற்ற போய் உயிர்நீத்த 750-க்கும் மேற்பட்ட சுவிஸ் வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்தச் சிலை செதுக்கப்பட்டது.
ஒரு பெரிய இயற்கை மணற்பாறைக்குள்ள, அம்பால் குத்தப்பட்டு உயிரை விடும் நிலையிலும் கேடயத்தைப் பாதுகாக்கும் ஒரு சிங்கத்தை செதுக்கியிருக்காங்க. பிரபல அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் (Mark Twain) இந்த சிலையைப் பார்த்துட்டு, “உலகத்திலேயே மிகவும் சோகமான, ஆனா நெஞ்சை தொடுற ஒரு கல் சிலை” அப்படின்னு வர்ணிச்சிருக்காரு.
ஓல்ட் டவுன் (Altstadt) – வீதியே ஒரு ஆர்ட் கேலரி!
இங்கிருந்து அப்படியே நடந்தீங்கன்னா ‘ஓல்ட் டவுன்’ வரும். இங்க கார்களுக்கோ, பைக்குகளுக்கோ அனுமதியே கிடையாது (Car-Free Zone).
இங்க இருக்குற பழமையான கட்டிடங்களின் சுவர்கள்ல ‘ஃப்ரிஸ்கோஸ்’ (Frescoes) அப்படின்னு சொல்லப்படுற பிரம்மாண்டமான ஓவியங்கள் வரைஞ்சிருப்பாங்க. பழங்கால கிராமத்து வாழ்க்கை, வேட்டையாடுதல், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த ஓவியங்கள், இந்த நகரத்தையே ஒரு திறந்தவெளி கலைக்கூடமா (Outdoor Art Gallery) மாத்துது!”

இன்ஜினியரிங் அற்புதம் & நவீன லூசர்ன்

“லூசர்ன் வெறும் பழமை மட்டுமில்ல மக்களே… இன்ஜினியரிங்லயும் கெத்துதான்!

  1. ராய்ஸ் நதி அணை (Needle Dam): 1860-இல் கட்டப்பட்ட ஒரு மர அணை அமைப்பு இன்றும் இயங்குது! மரக் கட்டைகளை (Needles) கையாலயே ஏற்றி இறக்கி, லூசர்ன் ஏரியின் நீர்மட்டத்தைக் கட்டுப்படுத்துறாங்க. இதன் மூலம் நகரத்துக்குத் தேவையான மின்சாரமும் தயாரிக்கப்படுது.
  2. KKL கலாச்சார மையம் (Culture and Convention Center): பிரெஞ்சு ஆர்க்கிடெக்ட் ‘ஜீன் நூவல்’ வடிவமைச்ச இந்த கட்டிடம், ஏரி நீருக்கு மேல மிதக்குற மாதிரி கூரையோட இருக்கும். உலகத்தரம் வாய்ந்த அஃகௌஸ்டிக்ஸ் (Acoustics) வசதி கொண்ட கான்செர்ட் ஹால் இது.
  3. சுவிஸ் டிரான்ஸ்போர்ட் மியூசியம்: சுவிட்சர்லாந்தின் மிகவும் பிரபலமான மியூசியம். ட்ரெயின், பிளேன், கார், விண்வெளி ஓடங்கள்னு டிரான்ஸ்போர்ட் வரலாற்றையே இன்டராக்டிவா மாத்தி வச்சிருக்காங்க.”

லூசர்ன் ஏரி போட் ரைட் & சுற்றியுள்ள மலைகள்

“லூசர்ன் வந்தா கண்டிப்பா பண்ண வேண்டிய ஒரு விஷயம் — லூசர்ன் ஏரி படகுச் சவாரி (Lake Lucerne Cruise).
Lake Lucerne Cruise
கண்ணாடி போல மின்னும் ஏரி நீர்ல போயிட்டே, சுத்தி இருக்கிற பிலாத்துஸ் (Pilatus), டிட்லிஸ் (Titlis) மலைகளின் அழகை ரசிக்கிறது ஒரு தனி அனுபவம்!
  • பிலாத்துஸ் மலை (Mount Pilatus): உலகத்திலேயே மிக செங்குத்தான ‘காக்வீல் ரயில்’ (Cogwheel Railway) மூலமா இந்த மலைக்கு போகலாம்!
  • டிட்லிஸ் மலை (Mount Titlis): 360-டிகிரி சுழலும் கேபிள் கார் (Rotair) மூலம் பனி நிறைந்த சிகரத்தை அடையலாம்.”

முடிவுரை

“பழமை மாறாத கட்டிடங்கள், மனதை மயக்கும் ஏரி, பிரம்மாண்டமான மலைகள், நவீன கட்டமைப்பு… இது எல்லாம் சேர்ந்த ஒரு மாயாஜால உலகம் தான் இந்த லூசர்ன்!
நீங்க சுவிட்சர்லாந்துக்கு ட்ரிப் பிளான் பண்ணா, கண்டிப்பா 2 அல்லது 3 நாட்கள் லூசர்ன் நகரத்துல தங்குற மாதிரி பிளான் பண்ணுங்க. உங்க வாழ்க்கையில மறக்க முடியாத அனுபவமா இது இருக்கும்.
இந்த எபிசோட் உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, உங்க பிரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க! அடுத்து எந்த ஊரைப் பத்தி பார்க்கணும்னு கமெண்ட்ல சொல்லுங்க!
அடுத்த எபிசோட்ல சந்திப்போம்… Bye,,,,

Related Articles

Back to top button