Swiss News In Tamil

ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 66 வயதுப் பெண்ணிற்குச் சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள ‘கூப்’ (Coop) குழுமக் கடைகளுக்குள் நுழைய 2 ஆண்டுகள் தடை!

ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 66 வயதுப் பெண்ணிற்குச் சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள ‘கூப்’ (Coop) குழுமக் கடைகளுக்குள் நுழைய 2 ஆண்டுகள் தடை!

3 7

பேர்ன் (Bern) நகரில் உள்ள ‘கூப்’ (Coop) பல்பொருள் அங்காடியில் ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, 66 வயதுப் பெண் ஒருவருக்குச் சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள கூப் குழுமக் கடைகளுக்குள் நுழைய இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேர்னிலுள்ள ரிஃப்லிஹோஃப் (Ryfflihof) கடையில் உதவி கேட்டபோது ஊழியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்பெண் திட்டிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இத்தடையானது கூப் கடைகள் மட்டுமின்றி கூப் சிட்டி, மருந்துக்கடைகள், இன்டர்டிஸ்கவுண்ட் (Interdiscount), ஜும்போ (Jumbo), ஃபுஸ்ட் (Fust) மற்றும் அப்டேட் ஃபிட்னஸ் (Update Fitness) உட்படக் குழுமத்தின் அனைத்துக் கிளைகளுக்கும் பொருந்தும்.

குறித்த பெண் பல சந்தர்ப்பங்களில் தங்கள் ஊழியர்களை மோசமாகத் திட்டியதால், ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதியே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளராக உள்ள தாய்க்கு விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல், நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கடைகளுக்கும் தடை விதித்தது மிக அதிகமான நடவடிக்கை என அவரது மகன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.