தெசின் (Ticino) மாகாண நடுநிலைப் பள்ளிகளில் A, B பிரிவுகளை உடனடியாக நீக்கப் பெற்றோர் அமைப்புகள் கோரிக்கை!

சுவிட்சர்லாந்தின் தெசின் (Ticino) மாகாணத்தில் உள்ள அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும், மாணவர்களை A மற்றும் B என இரு பிரிவுகளாகப் பிரிக்கும் முறையைத் தாமதமின்றி நீக்க வேண்டும் எனப் பெற்றோர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
தற்போது 6 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இப்பிரிவுகள் நீக்கப்பட்டு, ஒரே வகுப்பில் இரு ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்; மற்ற 29 பள்ளிகளில் கணிதம் மற்றும் ஜெர்மன் மொழிக்கு இப்பிரிவுகள் தொடர்கின்றன. இத்திட்டத்தை விரிவுபடுத்துவதைத் தள்ளிவைப்பது குறித்து மாகாண நாடாளுமன்றக் கல்விக் குழு ஆலோசித்து வரும் நிலையில், மாற்றத்தைத் தாமதிக்கக் கூடாது என மாநில பெற்றோர் மாநாட்டின் தலைவர் பியர்ஃப்ராங்கோ லோங்கோ (Pierfranco Longo) தெரிவித்துள்ளார்.
12 வயதிலேயே பிரிவைத் தீர்மானிப்பது குடும்பங்களுக்கு மனச்சுமையையும், ‘B’ பிரிவு மாணவர்களுக்குத் தொழில் பயிற்சி (Apprenticeship) வாய்ப்புகளில் பாகுபாட்டையும் ஏற்படுத்துவதாக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.



