Local Swiss News

புகலிடக் கோரிக்கையாளர் தங்குமிடத்தில் மோதல்! பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஒருவர் மீது சரமாரித் தாக்குதல்

ஜுக் (Zug) மாகாணம் மென்சிங்கன் புகலிடக் கோரிக்கையாளர் தங்குமிடத்தில் மோதல்! – பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஒருவர் மீது சரமாரித் தாக்குதல்; நால்வர் கைது.

8 5

சுவிட்சர்லாந்தின் ஜுக் (Zug) மாகாணம் மென்சிங்கன் (Menzingen) பகுதியில் உள்ள புகலிடம் கோருபவர்களுக்கான தங்குமிடத்தில், சனிக்கிழமை மாலை ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்டமாக, அந்தத் தங்குமிடத்தில் சிறுவர் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஜுக் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அந்த நேரத்தில் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சற்று நேரத்திலேயே, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான குறிப்பிட்ட நபர் அங்கிருந்த சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தார். ஜுக் மீட்புப் படையினரின் முதலுதவிக்குப் பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இத்தாக்குதல் தொடர்பாகத் துருக்கியைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களில் மூவர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; ஜுக் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.