சுவிஸ் தலைநகர் பெர்னில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறை ஊழியர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம்! – தொடர் பணிநீக்கங்களை நிறுத்தவும், பத்திரிகைத் துறையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும் வலியுறுத்தல்.

சுவிட்சர்லாந்தின் தலைநகர் பெர்னில் (Bern), பத்திரிகைத் துறையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கக் கோரி பத்திரிகையாளர்களும் ஊடகத்துறை ஊழியர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்கள், ஊழியர் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘மீடியா அலையன்ஸ்’ (Media Alliance) என்ற இயக்கம் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களிலும், அண்மைய வாரங்களிலும் சுவிட்சர்லாந்தின் பல முன்னணி ஊடக நிறுவனங்கள் ஏராளமான ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கியுள்ளன.
ஜனநாயகத்தின் ‘நான்காவது தூணாக’ விளங்கும் ஊடகத் துறை, அரசின் செயல்பாடுகளைக் கண்காணித்து மக்களுக்கு உண்மைகளைக் கொண்டு சேர்க்கும் முக்கியப் பணியைச் செய்கிறது.
தொடர் பணிநீக்கங்களால் பத்திரிகைத் துறை மெல்ல மெல்ல வீழ்ச்சியடைந்து வருவதாகவும், இதனால் ஜனநாயகம் பலவீனமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள போராட்டக்காரர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.



