பள்ளிக்கு விடுப்பு எடுத்த மாணவியின் பெற்றோருக்கு தலா 250 பிராங்குகள் அபராதம்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் அன்டர்லேண்ட் (Zurich Unterland) பகுதியில், தென் அமெரிக்காவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாட்டியைப் பார்ப்பதற்காகப் பள்ளிக்குச் செல்லாத 18 வயது மாணவியின் பெற்றோருக்கு விதிக்கப்பட்ட தலா 250 சுவிஸ் பிராங்குகள் அபராதத்தை டீல்ஸ்டோர்ஃப் (Dielsdorf) மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முறையான முன்அனுமதியின்றி 18 நாட்கள் பள்ளிக்குச் செல்லாததற்காக, அம்மாணவியின் பெற்றோர் இருவருக்கும் தலா 250 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்துப் பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், எதிர்பாராத குடும்பச் சூழலில் நெருங்கிய உறவினரைச் சந்திக்கச் செல்வதற்கு முன்அனுமதி தேவையில்லை என ஏற்றுக்கொண்டது.
இருப்பினும், பாட்டி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் மாணவி பள்ளிக்குத் திரும்பாமல் கூடுதல் நாட்கள் தென் அமெரிக்காவிலேயே தங்கியது விதிமீறல் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதன் மூலம், பெற்றோர்கள் மொத்தம் 500 பிராங்குகள் அபராதத்துடன், தலா 1,000 பிராங்குகளுக்கு மேலான நீதிமன்றச் செலவுகளையும் ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.



