Local Swiss News

திருடச் சென்ற வீட்டில் குடியிருப்பாளரைக் கண்டு நாற்காலியில் அமர்ந்து காவல்துறைக்காகக் காத்திருந்த திருடன்! – ஆர்காவ் மாகாணத்தில் நிகழ்ந்த விநோதச் சம்பவம்.

திருடச் சென்ற வீட்டில் குடியிருப்பாளரைக் கண்டு நாற்காலியில் அமர்ந்து காவல்துறைக்காகக் காத்திருந்த திருடன்! – ஆர்காவ் மாகாணத்தில் நிகழ்ந்த விநோதச் சம்பவம்.

4 4

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் (Aargau) மாகாணத்தில் உள்ள ரீட்ஹெய்ம் (Rietheim) பகுதியில், வீடு புகுந்து திருட முயன்ற நபர் ஒருவர், குடியிருப்பாளரைக் கண்டதும் தப்பி ஓடாமல் அங்கேயே நாற்காலியில் அமர்ந்து காவல்துறைக்காகக் காத்திருந்து சரணடைந்த விநோதச் சம்பவம் நடந்துள்ளது.

ஜுர்சாக் (Zurzach) நகராட்சிக்கு உட்பட்ட ரீட்ஹெய்ம் ஷோஸ்காஸ் (Schlossgasse) தெருவில் உள்ள பழைய குடியிருப்புக் கட்டிடம் ஒன்றில் புதன்கிழமை மாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காலியாக இருந்த தரைத்தளக் குடியிருப்பின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த 34 வயது நபர், அறைகளைச் சோதனையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வசிப்பவர் ஒருவர் அந்நபரைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடுவதற்குப் பதிலாக, அந்தத் திருடன் அங்கிருந்த நாற்காலியில் அமைதியாக அமர்ந்து, குடியிருப்பாளர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறை வரும் வரை காத்திருந்துள்ளான்.

பின்னர் அங்கு வந்த ஜுர்சிபியெட் (Zurzibiet) பிராந்தியக் காவல்துறையினர், எவ்வித எதிர்ப்புமின்றி அவனைக் கைது செய்ததுடன், அவனிடமிருந்து ஹஷிஷ் (Hashish) போதைப்பொருளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.