சுவிஸ் 2027 மத்திய பட்ஜெட்டில் இரு சபைகளிடையே முரண்பாடு! – மாநிலங்கள் சபை நிதிக் குழு ஏற்பு; தேசிய சபை நிதிக் குழு நிராகரிப்பு.
சுவிட்சர்லாந்தின் 2027-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளின் நிதிக் குழுக்களும் நேர் எதிரான முடிவுகளை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற அலுவலகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
மாநிலங்கள் சபையின் (Council of States) நிதிக் குழு 11 ஆதரவு வாக்குகளுடன் பட்ஜெட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் ஒருவர் வாக்களிக்காமல் விலகிய நிலையில், எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், புகலிட மையங்கள் உள்ளிட்ட சில துறைகளில் செலவுகளைக் குறைக்கவும், சிலவற்றில் அதிகரிக்கவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, தேசிய சபையின் (National Council) நிதிக் குழு பெரும்பான்மையுடன் பட்ஜெட்டை நிராகரித்து, மத்திய அமைச்சரவைக்கே (Federal Council) திருப்பி அனுப்ப வேண்டும் என முடிவெடுத்துள்ளது. வரவிருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரில் முதலில் தேசிய சபை இது குறித்து விவாதிக்கும்.
ஒருவேளை தேசிய சபை நிராகரித்தாலும், பட்ஜெட் மாநிலங்கள் சபைக்கு அனுப்பப்படும்; அங்கு அது ஏற்கப்பட்டால், அதன் முடிவுகளின் அடிப்படையில் தேசிய சபை மீண்டும் ஒருமுறை பட்ஜெட்டைப் பரிசீலிக்கும்.



