சுவிட்சர்லாந்தில் மின்னணு அடையாள முறை (E-ID) கட்டாயமற்றதாக இருக்க வேண்டும்! – அரசியலமைப்புத் திருத்தம் கோரி புதிய மக்கள் முன்னெடுப்பு.
சுவிட்சர்லாந்தில் மின்னணு அடையாள முறையின் (E-ID) பயன்பாடு விருப்பத்திற்கு உட்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என வலியுறுத்தி, “டிஜிட்டல் ஆம், ஆனால் சுதந்திரமானது” (Digital Yes, but Free) என்ற புதிய மக்கள் முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சேவைகள் மற்றும் தயாரிப்புகளைப் பெறுவதற்கு E-ID கட்டாயமாக்கப்படக் கூடாது என்பதையும், ‘ஸ்வியு’ (Swiyu) போன்ற அரசு டிஜிட்டல் பணப்பைகளை அடையாள ஆவணங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதையும் அரசியலமைப்பில் உறுதி செய்ய இக்குழு விரும்புகிறது.
நிதிப் பரிவர்த்தனைகளுக்கோ அல்லது தனிநபர் கண்காணிப்பிற்கோ இவற்றைப் பயன்படுத்தத் தடை கோரும் இந்த முன்னெடுப்பிற்கு, 2028 மே 17-க்குள் 100,000 கையொப்பங்களைச் சேகரிக்க வேண்டியுள்ளது.
செப்டம்பர் 2025 வாக்கெடுப்பில் 50.39% ஆதரவுடன் E-ID முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பாதுகாப்புச் சவால்களால் இதன் அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



