Swiss Tamil Events

Tamil Dream Night 2026: சுவிட்சர்லாந்தில் பிரமாண்ட தமிழ் இசை இரவு!

AGP Presents – Tamil Dream Night 2026: சுவிட்சர்லாந்தில் பிரமாண்ட தமிழ் இசை இரவு!

சுவிட்சர்லாந்தில் தமிழ் இசை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் AGP Presents – Tamil Dream Night 2026 என்ற பிரமாண்ட இசை நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் இந்தியாவின் பிரபல இசை நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமான முன்னணி பாடகர்கள் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தமிழ் பாடகர்கள் என பலர் ஒரே மேடையில் இணைந்து இசை விருந்தளிக்க உள்ளனர்.

🎤 சிறப்பு கலைஞர்கள்

இந்த இசை இரவில்,

Karthik Devaraj
Haripriya
Sridar Sena
Pooja Venkat

ஆகிய முன்னணி கலைஞர்களுடன்,

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பாடகர்களான
Shrijan Sivathas
Shrijan Srila
Thaanika

ஆகியோரும் இணைந்து இசை நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.

Tamil Dream Night News

🎙️ நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்

நிகழ்ச்சியை Nigitha Reegan மற்றும் Kavithran ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளனர்.

💃 வரவேற்பு நடனம்

நிகழ்விற்கு சிறப்பு வரவேற்பாக Ashmika Rajanikanth அவர்களின் வரவேற்பு நடனமும் இடம்பெறவுள்ளது.

Tamil Dream Night 2026 நிகழ்வின் விளம்பர அனுசரணையாளர்களாக Lamelle Glass, Raaniyan Video, Madras Dosa, LetsGoTravels, Aiya Restaurant மற்றும் TamilPrint நிறுவனத்தினர் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

தமிழ் இசை, பாடல், நடனம் மற்றும் பொழுதுபோக்கு என பல்வேறு அம்சங்களுடன் நடைபெறவுள்ள Tamil Dream Night 2026, சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ் இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு இசை அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிரமாண்ட நிகழ்விற்கு SwissTamilTv – Official Media Partner ஆக இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.